சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

வள்ளியூரில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-07-10 18:45 GMT

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை புறநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வள்ளியூர் வியாபாரிகள் சங்க பொன்விழா மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் தலைமை தாங்கினார். பொருளாளர் சாமுவேல், துணை செயலாளர் ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் வெள்ளத்துரை, இளைஞர் அணி செயலாளர் பிரனவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் எட்வின் ஆபிரகாம் வரவேற்றார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. வள்ளியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றுவது. புறவழிச்சாலை ராஜபுதூர் ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக தென்காசி, பாபநாசத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சார்லஸ்ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அருண்குமார், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்