சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழக கவர்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்து இருப்பதை கண்டித்து, கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், வக்கீல் அணி செயலாளர் சகாயராஜ், வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ராஜன், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவைத்தலைவர் மதியழகன், செல்வராஜ், காமராஜ், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.