தாலுகா அலுவலகத்தில் சமத்துவ, சுகாதார பொங்கல் விழா
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ, சுகாதார பொங்கல் விழா நடந்தது.
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் குமார் முன்னிலை ௳கித்தார். தேர்தல் துணை தாசில்தார் நிர்மலா, தலைமையிடத்து துணை தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் ராஜேஷ் உள்ளிட்ட தாலுகா் அலுவலக பணியாளர்கள், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகப் பணியாளர்கள், வட்ட வழங்க அலுவலகப் பணியாளர்கள், நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.