பிரதமர் மோடி உடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்

பிரதமர் மோடி உடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2022-11-11 14:15 GMT

மதுரை,

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கபதற்காக பிரதமர் மோடி இன்று மதுரை வந்தார். பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி, அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

மதுரை விமானநிலையத்தில் அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இரண்டு பேருமே ஒன்றாக இன்று விமான நிலையத்தில் இருந்தனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அருகருகே நிற்காமல் கொஞ்சம் தள்ளி இருந்தனர். இரண்டு பேருமே ஒன்றாக மோடியை வரவேற்றனர். தனித்தனியாக நின்ற இருவரையும் பிரதமர் மோடி அருகருகே வருமாறு அழைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. முகத்திற்கு முகம் பார்த்துக்கொள்ளவில்லை. இரண்டு பேரும் பேசும் சூழ்நிலைகள் ஏற்படவில்லை.

திண்டுக்கல்லில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். மதுரை விமானநிலையத்தில் இருந்து பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். ஆனால் மதுரை விமான நிலையத்தில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பிடம் பிரதமர் மோடி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்