எப்போதும்வென்றானில் மாட்டுவண்டி பந்தயத்தில் ஓடையில் மாட்டுவண்டி கவிழ்ந்து பந்தய மாடு பலி

எப்போதும்வென்றானில் மாட்டுவண்டி பந்தயம்: ஓடையில் மாட்டுவண்டி கவிழ்ந்து பந்தய மாடு பலியானது.

Update: 2023-07-09 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றானில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் ஒரு மாட்டுவண்டி சாலையோரத்தில் இருந்த ஓடையில் கவிழ்ந்ததில் பந்தயமாடு பரிதாபமாக பலியானது.

மாட்டுவண்டி பந்தயம்

ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 17 மாட்டு வண்டிகளும், தேன் சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 30 வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டிகளை

சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சிங்கிலிபட்டி சங்கு சாமி மாட்டு வண்டி பிடித்தது. 2-வது இடத்தை வள்ளியூர் ஆனந்த மாட்டு வண்டியும், 3-வது இடத்தை மஞ்சநாயக்கன்பட்டி வீரஜோதி, மாட்டு வண்டியும் பிடித்தன. பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை எப்போதும்வென்றான் லிங்கம்மாள் மாட்டு வண்டியும், 2-வது பரிசை வனராஜா மாட்டு வண்டியும், 3-வது இடத்தை பொம்மையாபுரம் மதன்குமார் மாட்டு வண்டியும் பிடித்தன.

தேன் சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் கூட்டுறவுங்காடு சகுந்தலா வனரோஜா மாட்டு வண்டி முதலிடத்தையும், 2வது இடத்தை பொன் முத்தையாபுரம் மாட்டுவண்டியும்,, 3-வது இடத்தை வள்ளியூர் முத்தையா தேவர் மாட்டு வணடியு்், 4வது பரிசை தேனி மாவட்டம் கம்பம் ஏ.ஆர் ராமச்சந்திரன் மாட்டு வண்டியும் பிடித்தன. பந்தயத்தில் சீறிபாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறங்களிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகள் மற்றும் சாரதிகளக்கு பரிசு வழங்கப்பட்டன.

பந்தய மாடு பலி

இதற்கிடையில் 6 கி.மீ. தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பங்கேற்ற தேனி மாவட்டம் சின்ன ஓவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிஸ் என்பவருக்கு சொந்தமான மாட்டு வண்டி முதல் இடத்தைப் பிடிப்பதற்கு எல்கை நோக்கி முந்தி ஓடிக் கொண்டிருந்தது. இடையில் எதிர்பாராத விதமாக அந்த மாட்டு வண்டி நிலைதடுமாறு சாலைஓரத்தில் உள்ள ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளளது. இதில் ஒரு பந்தய மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மற்றொரு மாட்டையும், சாரதியையும் மீட்டனர். சாரதிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து எப்போதுவென்றான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டி சக்கரம் கழன்றது

மேலும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் நாலாந்தலாவை சேர்ந்த முருகேசன் ஓட்டி வந்த மாட்டு வண்டி ஒரு சக்கரம் திடீரென சேதமைடந்து கழன்று ஓடியது. ஆனாலும், தொடர்ந்து அவர் அதனை பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்த, மாடுகளும் வேகமாக ஓடி முதலிடத்தை தட்டிச் சென்றனர். இதை கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்