இ.பி. காலனி வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் இயக்க வேண்டும்

இ.பி. காலனி வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-05-07 19:50 GMT

தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி, கல்யாணசுந்தரம் நகர், தேவன் நகர், ஜெயலட்சுமி நகர், மாதா நகர், வங்கி ஊழியர் காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு ஒரு மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், புதிய பஸ் நிலையம் பகுதிக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்