அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் தொடக்கம்

அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் தொடங்கப்பட்டது.;

Update: 2023-07-12 19:13 GMT

ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று சுற்றுச்சூழல் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரமா தலைமை தாங்கினார். பள்ளியின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்கண்ணா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி மரக்கன்றுகள் நட்டு வைத்து, சுற்றுச்சூழல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் கவுதமி, பவானி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்