இளையான்குடி சாலையூர் ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தௌலத் தலைமை தாங்கினார். உலக சுற்றுச்சூழல் சுகாதார தின விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம், தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன். ரகூப் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.