சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்

பழனியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-06-05 19:00 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பழனி வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பழனியில் நடைபெற்றது. பழனியாண்டவர் கல்லூரி பகுதியில் தொடங்கிய ஊர்வலத்துக்கு வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். வனவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் வனத்துறை பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவிகள், குழந்தைகள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலமானது திண்டுக்கல் ரோடு, பஸ்நிலைய ரவுண்டானா, ஆர்.எப். ரோடு வழியே ரெயில்நிலைய பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது கல்லூரி மாணவிகள் 75 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி வந்தனர். அதேபோல் ஏராளமான குழந்தைகள் சைக்கிளிலும், நடந்தும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் வனவள பாதுகாப்பின் அவசியம், சுற்றுச்சூழலை காப்பதன் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்