தொழில் முனைவோர் கருத்தரங்கம்

கோவில்பட்டி கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-10-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினார். முதல்வர் மதிவண்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பிரெட்ரிக் டேவிட் வரவேற்றார். நெல்லை பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய கள ஒருங்கிணைப்பாளர் சுவைதரன், இன் சீரிக்ஸ் டெக் சொலுஷன் தலைமை இயக்க அதிகாரி முகமது நவுசாத் செரீப் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் முனைவு மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய விழிப்புணர்வு திட்டம் என்ற தலைப்பில் பேசினார்கள். மாணவர்கள் அரசையே சார்ந்திராமல் சுய தொழில் தொடங்குவது பற்றியும், வங்கிகளில் கடன் பெறுவது பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்