தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
கயிறு வாரியம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடக்கிறது.
வேலூர்
கயிறு வாரியம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடக்கிறது.
கயிறு வாரிய மண்டல அலுவலகம் பொள்ளாட்சி சார்பில் புதிய தென்னை நார் கயிறு தொழில் தொடங்க உள்ளவர்கள் மற்றும் தொழில் நடத்துனர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள அண்ணாமலை ரெசிடென்சி ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில், பயிற்சி கையேடு, உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் 18 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 நபர்களுக்கு மட்டுமே பயிற்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களை coirpollachi1@gmail.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல அலுவலக ஆய்வாளர் வித்யாதரன் தெரிவித்துள்ளார்.