தொழில் முனைவோர் மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்

குளோபல் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-04-01 16:53 GMT

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ராணிப்பேட்டை குளோபல் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி நிறுவனர் வேதுலா ராமபிரசாத், கல்லூரி செயலர் ஹேமா பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சே.வரலட்சுமி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன தலைமை பயிற்சியாளரும், ஜெய்ஹோ அகாடமி நிறுவன தலைமை பயிற்சியாளருமான ஆதர்ஷ் மிட்டல் கலந்து கொண்டு மாணவிகள் தொழில் தொடங்கும் முறைகள், தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாடு பற்றி விளக்கி கூறினார். பின்னர் அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் தி.ஆறுமுகம், தொழில்முனைவோர் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கள ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் ஆகியோர் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.

இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினரை கல்லூரியின் தொழில் முனைவோர் திறன் ஒருங்கிணைப்பாளர் வை.சுகந்தி வரவேற்றார். முடிவில் நுண்ணுயிரியல்துறை உதவி பேராசிரியர் ஆர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்