தொழில் அதிபர் ராமலிங்கத்துக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு

துபாய் அரசின் கோல்டன் விசா பெற்ற தொழில் அதிபர் ராமலிங்கத்துக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-12-18 18:45 GMT

துபாய் அரசின் கோல்டன் விசா பெற்ற தொழில் அதிபர் ராமலிங்கத்துக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

தமிழக- கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையைச் சேர்ந்தவர் கே.ராமலிங்கம். தொழிலதிபரான இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். தென்காசியிலும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

ராமலிங்கத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியது. இதனை பெற்றுக்கொண்ட அவர் தனது சொந்த ஊரான புளியரைக்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தென்காசிக்கு வந்த அவரை ஆர்.எஸ்.கே. பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கடின உழைப்பு

இதுகுறித்து ஆர்.எஸ்.கே. பைனான்ஸ் நிறுவன மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''புளியரை என்ற சிறிய ஊரில் பிறந்த ராமலிங்கம் கடல் கடந்து வெளிநாட்டில் ஒரே நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் துபாயில் புதிய கட்டுமான நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார். சுமார் 15 ஆண்டுகளாக செயல்படும் இவரது நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழில் அதிபர் ராமலிங்கத்தின் கடின உழைப்பையும் முதலீட்டையும் கருத்தில் கொண்டு, அவருக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியது. இவரால் பலரது குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்து வருவது பெருமையாக உள்ளது'' என்று கூறினார்.

ஆர்.எஸ்.கே. பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை பாண்டியன், பாலசுப்பிரமணியன், துரை பால், சந்தோஷ், மூர்த்தி, ஜோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்