சென்னை வந்த ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு..!
சென்னை வந்த ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
சென்னை,
சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் ஜி20 கல்வி பணிக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர்.
அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக நாளை சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி வளாகத்தில் 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநில கல்வித்துறையின் நான் முதல்வன், நம்மப்பள்ளி திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் அரங்குகள் இடம்பெறும்.
2023-ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்று இருக்கிறது. ஜி20 உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜி20 அமைப்பு சார்பில், நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.