மாட்டு கொட்டகைக்குள் புகுந்தநாகப்பாம்பு

மாட்டு கொட்டகைக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது

Update: 2023-07-21 20:09 GMT

அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவருடைய மாட்டு கொட்டகைக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டதும், உடனே இதுபற்றி அவர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாட்டு கொட்டகையில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்து அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டது 4 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஆகும். பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் அந்தியூரில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்