இறுதிக்கட்ட கலந்தாய்வு: விழுப்புரம் அரசு கல்லூரியில் குவிந்த மாணவ, மாணவிகள்

விழுப்புரம் அரசு கல்லூரியில் நடந்த இறுதிக்கட்ட கலந்தாய்வுயில் பங்கேற்க மாணவ, மாணவிகள் குவிந்தனா்.

Update: 2022-10-06 18:45 GMT


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு இருந்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களது செல்போன் எண்களுக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டு, அவர்கள் கல்லூரிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அதன்படி கலந்தாய்வின் முதல்நாளான நேற்று, ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு குவிந்தனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் கல்லூரி சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த விழுப்புரம் நகர போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன், மாணவ- மாணவிகளை கல்லூரியின் உள்ளே வரிசையாக அனுப்பி வைத்து, கலந்தாய்வில் பங்கேற்க செய்தனர்.

தொடர்ந்து, இன்றும் (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்