ராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை
ராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2024 ஜூலையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் 11½ வயது நிரம்பிய, 13 வயதை அடையாத சிறுவர், சிறுமிகள் ராணுவ பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு வரும் டிசம்பர் 2-ந்தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்ப படிவம் கமாண்டண்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், இகர்ஹிகான்ட், உத்ரகாண்ட்-248003 என்ற முகவரிக்கு விரைவு தபால் மூலம் விண்ணப்பித்து எச்.டி.எப்.சி. வங்கி பல்லூபூர் சவுக். டேராடூன், உத்தரகாண்டில் செலுத்தத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான வரைவோலையை அனுப்பி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர் சென்னை-600 003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மற்ற விவரங்களுக்கு ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.