வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று 1,484 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விண்ணப்பத்தினர்.

Update: 2022-11-12 19:30 GMT

நெல்லை மாவட்டத்தில் நேற்று 1,484 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விண்ணப்பத்தினர்.

சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தங்கள் செய்ய நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 1,484 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெற்றது. வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களது பெயர்களை சேர்க்கவும், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்களை நீக்குவதற்கும், பெயர், முகவரி மற்றும் புகைப்பட விவரங்களை திருத்தம் செய்யவும், இடமாற்றம் செய்யவும் பலர் விண்ணப்பித்தனர்.

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இன்றும் நடக்கிறது

இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 26, 27-ந்தேதிகளிலும் நடைபெறுகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான www.nvsp.in (National Voter's Service Portal) மூலமாகவும், Voters Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்