தி.மு.க. உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தி.மு.க. உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;

Update: 2023-04-03 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி வடக்கு ஒன்றியம், பேரூர் கழக தி.மு.க. சார்பில் இளையான்குடியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் சுப.மதியரசன், பேரூர் கழகச் செயலாளர் நஜுமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி (எ) சாருஹாசன், தெட்சிணாமூர்த்தி, உதயசூரியன், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவனேசன், ராஜேந்திரன், துணைத்தலைவர் இப்ராஹிம், தவுலத், ரகூப், ஜெயினுலாபுதீன், இளைஞர் அணி ஆரிப், ரிஷி, கவுன்சிலர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்