கட்டுமான பொருட்கள்-சிமெண்டு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு

கட்டுமான பொருட்கள்-சிமெண்டு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

Update: 2022-10-16 19:09 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ரவி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு பொருளாளர் சிவக்குமார், கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் மாநில உதவி தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு மாநில தலைவர் ரவி நிருபர்களிடம் கூறுகையில், பொறியியல் படிப்பு முடித்த பொறியாளர்கள் மட்டுமே கட்டுமான தொழில் செய்ய ஏதுவாகவும், கட்டுமானத்துறையை வரைமுறைப்படுத்தவும் அரசு சார்பில் பொறியாளர் கவுன்சில் உடனடியாக அமைக்க வேண்டும். மேலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், சிமெண்டு விலையை குறைக்க சிமெண்டு தொழிற்சாலைகளை கண்டித்தும் சென்னையில் கூட்டமைப்பு சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். கட்டுமான பொருட்கள் சந்தை விலையை முறைப்படுத்த கட்டுமானத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முன்னதாக பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். முடிவில் கூட்டமைப்பு செயலாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்