பொறியியல் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது.

Update: 2022-08-16 03:04 GMT

சென்னை,

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது.

தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, இன்று காலை 10:30 மணிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். இதனையடுத்து வரும் 20ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, வரும் 25ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்