எரியோடு அருகே மின்சாரம் பாய்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

எரியோடு அருகே மின்சாரம் பாய்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-08-11 21:30 GMT

எரியோடு அருகே மின்சாரம் பாய்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.

மின்சாரம் பாய்ந்தது

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே அய்யலூர் சாலையில், குண்டாம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுதர்சன் சக்திவேல் (வயது 18). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நாகராஜ் தனது வீட்டுக்கு பின்புறம் பண்ணை அமைத்து அங்கு வாத்து மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை சுதர்சன் சக்திவேல் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு வீட்டின் பின்புறம் கோழி, வாத்துகளுக்கு இரை வைப்பதற்காக சென்றார்.

அப்போது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டியபடி உள்ள மின்கம்பியை சுதர்சன் சக்திவேல் தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட சுதர்சன் சக்திவேல் படுகாயம் அடைந்தார்.

மாணவர் பலி

இதனை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுதர்சன் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்