ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் திட்டம்கோட்ட பொறியாளர் ஆய்வு
ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் திட்டம் குறித்த வரைபடத்தை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு
ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் திட்டம் குறித்த வரைபடத்தை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தேசூர் -தெள்ளார் இடையே குண்ணகம்பூண்டி-வெடால் இணைப்பு சாலையை அகலப்படுத்த ரூ.1 கோடியே 10 லட்சம் மதி்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட வரைபடத்தை சென்னை கோட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர் விசாலாட்சி தலைமையில் செய்யாறு கோட்ட பொறியாளர் ராஜகணபதி, வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ் உல்லா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தரைப்பாலம் நடந்து வரும் பணியையும் பார்வையிட்டனர்.