கீழக்கரை,
கீழக்கரை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பர்த்தின்(வயது 23). என்ஜினீயர். இவருக்கு அதே தெருவில் மற்றொரு வீடு உள்ளது. இந்த நிலையில் இவரை 2 நாட்களாக காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்தனர். அப்போது மீனாட்சிபுரத்தில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பர்த்தின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.