ஈரோட்டில் தனியார் பஸ் மோதி என்ஜினீயர் சாவு; ஹெல்மெட் கழன்று விழுந்ததால் உயிரிழந்த பரிதாபம்

ஈரோட்டில் தனியார் பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்பட்டபோது ஹெல்மெட் கழன்று விழுந்ததால் உயிரிழந்தார்.

Update: 2023-10-07 21:04 GMT

ஈரோட்டில் தனியார் பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்பட்டபோது ஹெல்மெட் கழன்று விழுந்ததால் உயிரிழந்தார்.

என்ஜினீயர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலகவுண்டன்பட்டியை சோந்தவர் தேவராஜ். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 28). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் சொந்த ஊருக்கு விடுமுறை எடுத்து வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டுக்கு பிரசாந்த் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு சின்னப்பா லே-அவுட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ் பிரசாந்த் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

சாவு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிராந்த்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரசாந்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசாந்த் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றபோது ஹெல்மெட் அணிந்து உள்ளார். ஆனால் ஹெல்மெட்டை முறையாக பொருத்திக்கொள்ளாததால் விபத்தில் சிக்கியபோது தலையில் இருந்து ஹெல்மெட் கழன்று கீழே விழுந்துள்ளது. இதனால் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்