நெய்வேலி
நெய்வேலி மாற்றுகுடியிருப்பை சேர்ந்தவர் காசிநாதன் மகன் பாக்யராஜ்(வயது 33). என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி சுசித்திரா என்ற மனைவி உள்ளார். ஆனால் குழந்தை இல்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்யராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவிக்கிடையே நடந்த சண்டையில் கணவனை கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக் சென்ற சுசித்திரா குடும்பம் நடத்த வர மறுத்ததால் விரக்தி அடைந்த பாக்யராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.