மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியானார்.

Update: 2023-08-21 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியானார்.

என்ஜினீயர்

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் மெயின்ரோட்டை சேர்ந்தவர் டேவிட் ஜான்சன். இவருடைய மகன் ஜஸ்டின் சுதாகர் (வயது 28), என்ஜினீயர்.

இவர் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். இவருக்கு அலிஸ்டா என்ற மனைவியும், 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

தவறி விழுந்தார்

நேற்று முன்தினம் இரவு ஜஸ்டின் சுதாகர் தொழில் சம்பந்தமாக மோட்டார் சைக்கிளில் குமாரபுரம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். கண்ணப்பநல்லூர் அருகே வந்த போது சாலையில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியது. அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜஸ்டின் சுதாகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்