வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் கைது
திருவட்டார் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கம்பியால் தாக்கி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ெகாடுத்துள்ளார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கம்பியால் தாக்கி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ெகாடுத்துள்ளார்.
என்ஜினீயர்
திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தை சேர்ந்தவர் எட்வின் (வயது28). டிப்ளமோ என்ஜினீயர். இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். அதன்பின்பு தாயாருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான 47 வயது பெண் ஒருவர் மீது ஆசை இருந்து வந்தது. இதனால் அந்த பெண் வசித்துவந்த வீட்டு ஜன்னல் வழியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதை கவனித்து வந்த அந்த பெண் எட்வினின் தாயாரிடம் அதுபற்றி கூறி கண்டித்துள்ளார். இதனால் அந்த பெண்ணை எட்வின் பழிவாங்க துடித்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் அந்த பெண்ணின் கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மதியம் அந்த பெண் அதே பகுதியில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கட்டிலில் படுத்திருந்தார்.
பாலியல் பலாத்காரம்
அப்போது எட்வின் இரும்பு கம்பியுடன் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினார். இதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் எதுவும் நடக்காதது போல் அவர் தனது வீட்டுக்கு சென்றார். பெண்ணின் கணவர் வீடு திரும்பிய போது மனைவி ரத்த காயங்களுடன் அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதுகுறித்து அந்த ெபண்ணின் கணவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
போலீசில் சிக்கினார்
இந்தநிலையில் எட்வின் எதுவும் நடக்காதது போல் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவியுள்ளார். ஆனால் எட்வினின் நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் ஆற்றூர் கழுவன்திட்டையில் வைத்து எட்வினை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கம்பியால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து எட்வினை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அதனைத்தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் எனது தாயாருடன் வசித்து வருகிறேன். நான் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு 2017-ம் ஆண்டு வெளிநாட்டில் வேலைக்கு சென்றேன். அங்கு சரியான சம்பளம் கிடைக்காததால் ஊருக்கு வந்தேன். பின்னர் சாங்கையில் உள்ள ஒரு தனியார் பால் கம்பெனியில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறேன்.
எனது உறவினரான 47 வயதுடைய பெண் மீது எனக்கு ஆசை உண்டு. அவரை அடைய வேண்டும் என திட்டமிட்டேன். இந்தநிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பெண்ணின் கணவர் இரவு செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது நான் அந்த பெண்ணின் வீட்டின் அருேக சென்று ஜன்னலை திறந்து பார்த்தேன். அங்கு அந்த பெண் படுத்திருப்பதை பார்த்து வெளியே நின்றபடி ரசித்து கொண்டிருந்தேன். அப்போது நாய் குரைத்ததால் அந்த பெண் கண்விழித்து வெளியே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த என்னை பார்த்து சத்தம் போட்டார். உடனே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.
பழிவாங்க முடிவு
மறுநாள் எனது அம்மாவிடமும், உறவினர்களிடமும் இதைப்பற்றி அவர் கூறினார். இது எனக்கு பெரும் அவமானமாகிவிட்டது. இதற்கு பழிவாங்க காத்திருந்தேன்.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி அந்த பெண் அழகான ஆடை அணிந்து அருகில் உள்ள புதுமனை புகுவிழா வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் தனியாக படுத்திருந்தார். அவளை அடைய வேண்டும் என்ற ஆசையிலும், என்னை அவமானப்படுத்தியதால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சுற்றி திரிந்த நான் இதுதான் சந்தர்ப்பம் என்று கருதினேன். பின்னர் ஒரு இரும்புக்கம்பியை எடுத்துக்கொண்டு பெண்ணின் வீட்டுக்கு சென்றேன்.
இரும்பு கம்பியால் அடித்தேன்
வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது அவர் கட்டிலில் படுத்து இருந்தார். அவரிடம் 'என்னை அவமானப்படுத்திய நீ உயிரோடு இருக்கக்கூடாது. செத்து தொலைந்து போ' என்று ஆவேசமாக கூறிக்கொண்டே கம்பியால் தலையில் அடித்தேன். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் கழுத்தை நெரித்தேன். இதனால் அவர் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து காமம் தலைக்கேறிய நிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அதன்பின்னர் அவர் ெசத்துவிட்டதாக நினைத்து வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
அப்போது பெண்ணின் கணவரும், அவரது தம்பியும் அங்கு வந்தனர். அதற்குள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன்.
தப்பிச்செல்ல முடிவு
பின்னர் எனது வீட்டின் பின்புறம் கம்பியையும், உடைகளையும் மறைத்து வைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் நடமாட தொடங்கினேன். தொடர்ந்து போலீசாருக்கு பயந்து மார்த்தாண்டம் ரெயில் நிலையத்துக்கு சென்றேன். இரவு அங்கு தங்கிவிட்டு வெளியூர் தப்பி செல்ல முடிவு செய்து இருந்தேன். அதற்காக மறுநாள் பணம் எடுக்க வீட்டுக்கு வரும்போது ஆற்றூர் கழுவன்திட்டையில் வைத்து போலீசார் என்னை பிடித்துக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட எட்வினை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சை
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்படார். அங்கு நினைவு திரும்பாத நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணுக்கு கணவரும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.