திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-25 19:28 GMT

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தில் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் ராஜேஷ்குமார்(வயது 32). விவசாய கூலித்தொழிலாளியான இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்