திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயம்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயமானார்.
மணிகண்டம் அருகே உள்ள அய்யங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 21). பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ள ராஜேஸ்வரிக்கு குளித்தலை அருகே உள்ள நச்சலூர் கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு, கடந்த 18-ந் தேதி நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருந்த ராஜேஸ்வரி நேற்று காலை திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜேஸ்வரின் தந்தை சுப்பிரமணி மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியம் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது அவர் எங்கே சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.