திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அமலாக்கத்துறை ஆய்வு

அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2022-07-21 09:38 GMT

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 143 தண்டனை குற்றவாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்தல், விசா காலம் முடிந்த பிறகு இந்தியாவில் தங்கி இருத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

இவர்களிடம் நேற்றைய தினம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு செய்து வருகின்றனர். அங்குள்ளவர்கள் ஏதேனும் வங்கி பரிவர்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்