அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை
சட்ட விரோத பண பரிவர்த்தனை புகாரில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
சென்னை,
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நீடித்து வருகிறது. சட்ட விரோத பண பரிவர்த்தனை புகாரில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜரானார்