தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலச் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலச் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அரியலூர் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இத்தொழில் புரிந்து வருகின்றனர். அரியலூர் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் சுமார் 250 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். கேபிள் டி.வி. சிக்னல்களை மின்சாரத்தை கடத்தாத பைபர் ஆப்டிகல் வயர் மூலமே கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்து வருகிறோம். மேலும் பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் மின்சாரம் கடத்தாத வைபர் ஆப்டிகல்ஸ் கேபிள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் வரும் கேபிள்கள் பொதுவெளியில் மின்கம்பங்கள் மூலமாகவும், இரும்பு கம்பிகளின் மூலமாகவும் கேபிள் டி.வி. இணைப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம்.
கடுமையாக பாதிக்கப்படும்
தற்போது மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேபிள்களை அகற்ற வேண்டும் என வந்த செய்தியின்படி மின்கம்பங்களில் உள்ள பைபர் ஆப்டிகல் வயர்களை அப்புறப்படுத்தினால் இன்டர்நெட் பயன்படுத்தும் மற்றும் கேபிள் டி.வி. பார்க்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் அலுவலகத்தில் பயன்படுத்தி வரும் இன்டர்நெட் சேவையும் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசின் பாரத் நெட் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு வழங்கப்படும் இன்டர்நெட் சேவையும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அரியலூர் மாவட்டத்திற்கு கேபிள் டி.வி. நோடல் அதிகாரியாக உள்ள மாவட்ட கலெக்டர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளனர். 3 மாதங்கள் அவகாசம் கொடுத்தும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்