விநாயகர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு

5 புத்தூர் கிராமத்தில் விநாயகர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு குறித்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-25 13:24 GMT

கண்ணமங்கலம்

கணணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் பழமையான விஜயநகர பேரரசு கட்டிய விநாயகர் கோவிலை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

இந்த கோவிலுக்கு சொந்தமான காலியிடத்தில் சிலர் குடியிருந்து வந்தனர்.

இதில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் தனது பெயருக்கு பட்டா பெற்று, தனது மகன்களுக்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராமமக்கள் சார்பில் ஆரணி தாசில்தார் மற்றும் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

மேலும் அவர்கள் கோவில் காம்பவுண்ட் சுவரை இடித்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் ஆரணி தாசில்தார் ஜெகதீசன் நேற்று முன்தினம் 5 புத்தூர் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை கலெக்டர் ஒப்புதலோடு எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்