மழைநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும்

திண்டிவனத்தில் மழைநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவு

Update: 2022-11-04 17:55 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் வகாப் நகர், மரக்காணம் ரோடு, காந்திநகர், மின்வாரிய அலுவலக பகுதி, வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதா? என்று கலெக்டர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், 17-வது வார்டில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்துள்ளதாால் மண் கொட்டி சீரமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருப்பதாகவும், இதனை அகற்ற நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனே மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றவும், தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும் நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, தாசி்ல்தார் வசந்தகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்