குளத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு

சூரியமணல் பகுதியில் குளத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-09-03 18:30 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துலாரங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சூரியமணல் பகுதியில் ஆட்டுக்குட்டை என்ற குளம் உள்ளது. இந்த குளத்திற்கு நீர் வரத்துக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. அந்த நீர் வரத்து பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குறுக்கே மண்ணை கொட்டி மழை நீர் வருவதை முழுவதுமாக தடுத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளத்திற்கு செல்ல முடியாமல் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் பாய்ந்து பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்