புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு; போக்குவரத்துக்கு இடையூறால் பொதுமக்கள் அவதி

புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு; போக்குவரத்துக்கு இடையூறால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-07 21:20 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தைக்கு புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுடைய வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். வாரச்சந்தை பகுதியில் கடைகள் வைக்க இடம் உள்ள நிலையில் சிலர் பஸ் நிலையத்தின் உள்ளே கடைகள் வைத்துள்ளனர். மேலும் சந்தைக்கு வருவோர் பஸ் நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனத்தை நிறுத்தி செல்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்து செல்வதற்கு இடையூறாக உள்ளதுடன், பஸ் ஏற வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே வாரம்தோறும் வியாழக்கிழமை பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்