ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் 133 தென்னை மரங்களுடன் மீட்பு

ஆம்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் 133 தென்னை மரங்களுடன் மீட்கப்பட்டது.

Update: 2023-02-08 17:45 GMT

ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி மீட்க வேண்டுமென அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என்.சங்கரன் கடந்த 10 ஆண்டுகளாக வருவாய் துறையால் நடத்தப்படும் ஜமாபந்தியில் தொடர்ந்து மனு அளித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஆம்பூர் தாசில்தார் (பொறுப்பு) மகாலட்சுமி தலைமையில் துணை தாசில்தார் குமரவேல், வருவாய் ஆய்வாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் பாபு, வட்ட தலைமை நில ஆய்வாளர் ஆகியோர் சென்று நிலத்தை அளவீடு செய்து தனி நபரிடமிருந்து நிலத்தை மீட்டர்.

அந்த நிலத்தில் 133 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் மகசூலை ஏலம் விடுவதற்காக மின்னூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மின்னூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன், முன்னாள் துணைத் தலைவர் என்.சங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்