அவினாசி
அவினாசி தாலுகா அலுவலகத்தில் ராமநாதாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியதாவது:-
ராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலைகளை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால மயானத்திற்கு செல்லும் வழியில்லாத நிலை ஆகிவிட்டது. எனவே பொதுமக்கன் பயன்பாட்டில் உள்ள மயான சாலையை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
-----------