உணவு பொருள் இருப்பு குறைந்ததால் விற்பனையாளருக்கு அபராதம்

ரேஷன் கடையில் கலெக்டர் சோதனை: உணவு பொருள் இருப்பு குறைந்ததால் விற்பனையாளருக்கு அபராதம்

Update: 2022-12-13 18:45 GMT


ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் சோதனை நடத்தினார். காந்திநகர் ரேஷன் கடையில் பதிவேட்டில் உள்ளபடி உணவு பொருள்கள் இருப்பு உள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது இருப்பை விட 2,150 கிலோ அரிசி குறைவாகவும், துவரம் பருப்பு 180 கிலோ அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினார். அவர் சரியான விளக்கம் அளிக்காததால் உணவு பொருள்களின் இருப்பு குறைபாடுக்காக ரூ.63,200 அபராதம் விதித்து அந்த தொகையை அரசு கணக்கில் செலுத்த விற்பனையாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தேவிபட்டினம் பெரிய கடை வீதியில் உள்ள ரேஷன்கடையில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த பொதுமக்களிடம் உணவு பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என குறைகளை கேட்டார். அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்களை தடையின்றி வழங்க உத்தரவிட்டார். ஆய்வின்போது கலெக்டருடன் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், வட்ட வழங்கல் அலுவலர் தமீம்ராஜா மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்