ஈமு கோழி மோசடி வழக்கு.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஈரோடு அருகே ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு,
ஈரோடு அருகே ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கில் உரிமையாளர் செல்வகுமாருக்கு 10 சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த .2013ஆம் ஆண்டு வெளிவந்த ஈமு கோழி பண்ணை மோசடியில்.140 பேரிடம் ரூ.5.56 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கில் உரிமையாளர் செல்வகுமாரை கைது செய்தனர்.
எட்டு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த கோவை டான்பிட் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. செல்வக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5.60 கோடி அபராதம் விதித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் அனைவரையும் விடுவித்தது டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.