தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 49 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 49 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-01-20 18:13 GMT

ராணிப்பேட்டை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 49 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 18 தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். திறன் பயிற்சி நிறுவனம் கலந்து கொண்டு, 3 நபர்களை திறன் பயிற்சிக்கு தேர்வு செய்தது. முகாமில் சுமார் 174 பேர் கலந்து கொண்டனர். தேர்வு பெற்ற 48 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வார்டு கவுன்சிலர் ஜோதி ராமலிங்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தே.கவிதா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.


Tags:    

மேலும் செய்திகள்