மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைவாய்ப்பு

முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வருகிற 18-ந்தேதி கடைசி நாள்

Update: 2022-06-10 18:03 GMT

கடலூர்

ஊரகவேலை உறுதியளிப்பு திட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நல பணியாளர் களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், "வேலை உறுதித்திட்டப் பணி ஒருங் கிணைப்பாளர்களாக" பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆகவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நல பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடைசி நாள்

இது தொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்