பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது

Update: 2022-10-17 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து ஓசூரில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்கொண்டு உயர் கல்வியை தொடர இயலாத பெண்களுக்காக, இளநிலை தொழில் நிபுணர்கள் பணி காலியிடங்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் பெண்கள் 18 முதல் 20 வயதிற்குட்பட்டவராகவும், 145 செ.மீ. உயரமும், குறைந்தபட்சம் 43 முதல் அதிகபட்சம் 65 கிலோ வரை எடை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான முகாம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடக்கிறது. காலை 8 மணிமுதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முகாமில் கலந்து கொள்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவரக்குறிப்பு ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும், பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பைபெற www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களுடைய கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து பயன் பெறலாம். மேற்கண்ட தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்