திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 61 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரேவதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.