வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-08-27 19:00 GMT

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார். காக்னிசன் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவன அதிகாரி அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு தயாராவது குறித்து விளக்கி கூறினார். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மஹரிபிரகாஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிவன், முருகவேல், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்