வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கத்தினர் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கங்கத்தினர் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் கூறி உள்ளார்.

Update: 2022-11-04 18:45 GMT
வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கத்தினர் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கங்கத்தினர் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும், ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்களை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள ஒரு முத்தரப்பு குழு தேர்வு செய்யும்.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் http:www.labour.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள், சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலை அளிப்பவரானால் ரூ.250-ம், 0230-00 Labour and Employment 800 Other Receipts of Labour Department. DP Code: 0230 00 800 AG 22799 என்ற தலைப்பின் கீழ் http:www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற வலைதளத்தில் இ-செலான் மூலம் தொகையை செலுத்தி அசல் செலுத்துச்சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்