சேலத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

சேலத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-07 21:41 GMT

கன்னங்குறிச்சி:

மின்வாரிய ஊழியர்

சேலம் கோரிமேட்டை அடுத்த திருவேணி கார்டன் பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததாக கோரிமேடு மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பெரியக்கொல்லப்பட்டி காந்திநகர் புது காலனியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் குமார் (வயது 53) என்பவர் அந்த பகுதிக்கு மின் தடையை நீக்க சென்றார்.

பின்னர் அவர் அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் கம்பத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தார்.

பலி

படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்