மாடு முட்டி படுகாயம் அடைந்த கொசு ஒழிப்பு பணியாளர் சாவு

தேன்கனிக்கோட்டையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த கொசு ஒழிப்பு பணியாளர் இறந்தார்.

Update: 2022-07-28 17:15 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). இவர் நமலேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். கடந்த 18-ந் தேதி நமலேரி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர்கள் பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.. அதனைத்தொடர்ந்து அனைவரும் விவசாய நிலங்கள் வழியாக திரும்பி வந்தனர். அப்போது அங்கு கட்டி இருந்த ஒரு மாடு மிரண்டு கட்டை அவிழ்த்து கொண்டு செல்வனை முட்டி தள்ளி கழுத்து பகுதியில் பலமாக மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு நமலேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செல்வனின் தந்தை நாகன் அளித்த புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்