ரூ.2 லட்சம் பித்தளை பொருட்கள் திருடிய ஊழியர் கைது
ரூ.2 லட்சம் பித்தளை பொருட்கள் திருடிய ஊழியர் கைது
கோவை
கோவை செட்டி வீதியை சேர்ந்த சரண்குமார் (வயது 26). இவர் ராஜ வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்த போது கடந்த ஒரு ஆண்டில் ரூ.2 லட்சம் பித்தளை பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த 16 கேரள மாடல் குத்துவிளக்குகளில 4 குத்து விளக்குகளை காணவில்லை. இதுகுறித்து சரண்குமார் வெரைட்டிஹால் ேராடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது, கடை ஊழியர் கங்காதரன் என்பவர் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கங்காதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.